என் மனைவியின் “அதை” நான் இதுவரை பார்த்ததே இல்லை! பிரபல நடிகர் ஓபன் பேட்டி!

என் மனைவியின் அந்த ஒன்றை மட்டும் இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.


   நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. விமர்சன ரீதியில் படம் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் ரசிகர்களும் ஜீரோ படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஷாருக்கான் பேட்டி அளித்துள்ளார்.

   அப்போது அவரிடம், திரையுலகை கலக்கி வரும் மீ டூ புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஷாருக்கான் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: எனது 21 வயது மகனுக்கு நான் துவக்கம் முதலே மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது பற்றி கூறி வருகிறேன். அதுமட்டும் இல்லாமல், மற்றவர்களை மதிக்காமல் இருக்க கூடாது என்றும் சொல்லி வருகிறேன். மீ டூவை பொறுத்தவரை பாலியல் பிரச்சனைகள் குறித்து தான் பேசுகிறார்கள்.

   ஆனால் நான் என் மகனுக்கும் சரி, மகளுக்கும் சரி அடிப்படையாக கற்றுக் கொடுப்பது மரியாதையைத்தான். எனக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய மனைவியின் அதை நான் ஒரு போதும் பார்த்தது இல்லை. அது என்ன என்றால் எனது மனைவியின் பர்சைத்தான் சொல்கிறேன். அவர் பர்சில் என்ன இருக்கிறது என்று தற்போது வரை நான் பார்த்ததே இல்லை. என் மனைவி உடை மாற்றுவது தெரிந்தால் கதவை தட்டி வரட்டுமா? என்று கேட்பேன்.

   என் மனைவி கவுரி வாருங்கள் என்று கூறினால் மட்டுமே உள்ளே செல்வேன். இதே போலத்தான் எனது மகள் அறைக்கு செல்லும் போதும் கதவை தட்டிவிட்டு தான் உள்ளே செல்வேன். நான் தான் வருகிறேன் என்று அவர்களுக்கு தெரியும். ஏன் கேட்கிறீர்கள் நேராக உள்ளே வர வேண்டியது தானே என்று என் மனைவியும், மகளும் கேட்பார்கள். ஆனால் அது சரியானது இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை கொடுக்க வேண்டும்.

   இவ்வாறு ஷாருக்கான் கூறியுள்ளார். அதாவது கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக அவர் மனைவியின் பர்சை கூட இதுவரை பார்த்தது இல்லை என்று பதில் அளித்துள்ளார்.