இணையதளங்களில் வைரலாகும் பிரபல நடிகரின் பலான படம்!

பிரபல நடிகரின் நிர்வாணப் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.


பிரபல நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண படங்கள் ஆன்லைனில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் வரவால், நாளுக்கு நாள், யாராவது ஒரு நடிகர், நடிகையின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, 

பாலிவுட் நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வழக்கமாக, இப்படி நிர்வாண புகைப்படங்கள் வெளியானால் அவற்றை சம்பந்தப்பட்ட நபர் மறுப்பதுதான் வழக்கம். ஆனால், அலி ஃபாசல் சற்று வித்தியாசமாக, புகைப்படத்தில் உள்ளது நான் தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ''அவை எனது புகைப்படங்கள்தான். அதில் இருப்பது நான்தான். அவை மார்ஃபிங் செய்யப்பட்டவை இல்லை. ஆனால், இது எனது தனிப்பட்ட விசயம். புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று நான் கண்டுபிடிப்பேன்.

இது எனது பிரைவசி. அதை மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் இதுபற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகளின் நிர்வாண படங்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தும் நிலை மாறி, நடிகரின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், பாலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.