தலையில் டை! பெப்பர் அன்ட் சால்ட் தாடி! புதிய கெட்டப்பில் அஜித்! வைரல் புகைப்படம்!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு தற்போது வரை பெயர் சூட்டவில்லை.


இந்த நிலையில் நடிகர் அஜித் சென்னையில் உள்ள பிரபல உணவகத்திற்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு அஜித் வெளியேறிய போது எடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கிறார். எப்போதும் நரைத்த தலைமுடியுடன் பொது இடத்தில் காணப்படும் அஜித் இந்த முறை தலையில் டை அடித்திருந்தார். மேலும் அவர் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் இருந்தார்.

சூட்டிங் முடிந்து அப்படியே அஜித் மனைவியுடன் ஹோட்டலுக்கு வந்துள்ளார். இதன் மூலம் அஜித் தனது அடுத்த படத்தில் இதே கெட்டப்பில் நடிக்கலாம் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.