கோட்டை வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது உளவுத்துறை தமிழக அரசிடம் ஒப்படைத்திருக்கும் தேர்தல் சர்வே பற்றிய விவகாரம்தான்.
பேபிம்மாவையும் சேர்த்துக்குவோம்! எடப்பாடியிடம் கெஞ்சிய ஓபிஎஸ்!. உளவுத்துறை ரிசல்ட் உண்மைதானா?
இது உண்மையோ என்னவோ, 8 நாடாளுமன்றத் தொகுதிகளும் 9 சட்டமன்றத் தொகுதிகளும் மட்டுமே ஆளும் கட்சிக்குக் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் மெகா கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் வாசன் ஆகிய கட்சிகள் இணைந்தபிறகு வெற்றி நிலவரம் எப்படியிருக்கிறது என்று உளவுத்துறையிடம் எடப்பாடி கேட்டாராம். அதற்காக தமிழகம் முழுவதும் சர்வே எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில்தான் நாடாளுமன்றத்தில் 8 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாம்.
சட்டமன்றத்தில் 9 தொகுதிகள் கிடைக்கும் என்பது எடப்பாடியை உற்சாகப்படுத்தி இருந்தாலும் கடந்த தேர்தல் சர்வேயைவிட எப்படி திடீரென குறைந்தது என்று அதிர்ச்சி ஆகியுள்ளார்.
ஏனென்றால் உளவுத் துறை கடந்த முறை சர்வே எடுத்தபோது 16 நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதாம். ஆனால் இன்று அந்த நிலை சட்டென 8 ஆக சரிந்ததற்குக் காரணம் பொள்ளாச்சி விவகாரம் என்று சொல்லப்படுகிறது.
இந்த உளவுத் துறை ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர் வேறு யாரை கூட்டணி சேர்ப்பது என்று யோசனை செய்தார்களாம். அப்போதுதான், ஜெ.தீபா இப்போது தனியே நிற்கிறேன் என்று பஞ்சாயத்து செய்துகொண்டு இருக்கிறார், அவரையும் நம்ம கூட்டணிக்குக் கூட்டி வந்திடுவோம் என்று ஓ.பி.எஸ். சொல்ல, சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் எடப்பாடி டென்ஷன் ஆகியிருக்கிறார்.
எப்படியாவது பாதிக்குப் பாதி ஜெயிக்கணும், வேகமா வேலையைப் பாருங்க என்று அமைச்சர்களை விரட்டியடித்திருக்கிறாராம். பார்க்கலாம்... பார்க்கலாம்.