மரியாதையா பேசனும்! இல்லனா காது ஜவ்வு கிழிந்து விடும்! ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க மிரட்டல்!

மு.க.ஸ்டாலின் மரியாதை கொடுத்துப் பேச வேண்டும் என்றும், தான் திருப்பி பேசினால் காது சவ்வு கிழிந்து விடும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.


திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒட்டன்சத்திரத்தில் வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தந்தையின் ஆதரவில் கொல்லைப்புறமாக அரசியலுக்கு  வந்ததாகவும், கூலிப்படைத் தலைவன் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

ஆனால் தான் உழைத்து பதவிக்கு வந்ததாகத் தெரிவித்த அவர், சாதாரண தொண்டன் முதல்வரானால் அதை கேவலமாக பேசுவதா என கேள்வி எழுப்பினார். மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும் என்ற அவர் தான் திருப்பி பேசினால் காது சவ்வு கிழிந்துவிடும் என்றார். 

தாங்கள் மக்களை சந்தித்து என்ன திட்டங்களை நிறைவேற்றப் போகிறோம் என்று எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வதாகவும், ஆனால் ஸ்டாலின் பிரதமரையும், தன்னையும், த்ங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதையே பிழைப்பாக வைத்துக்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.