காலை 6.30 மணி..! ஒரே சத்தம்..! தன்னுடைய ஆண் உறுப்பை தானே அறுத்து சிவனுக்கு படையல் வைத்த நபர்..! மிரள வைக்கும் காரணம்!

சிறைக்கைதி ஒருவர் திடீரென தனது ஆணுறுப்பை அறுத்து அதை சிவலிங்கத்திற்கு படையல் வைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குவாலியர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு சிங் என்பவர் குற்றச் செயலுக்காக கைது செய்யப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜெயிலில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 6:30 மணிக்கு திடீரென விக்ரம் சிங் தனது ஆணுறுப்பை அறுத்து அதை சிவலிங்கத்திற்கு படையல் வைக்க முயன்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதைப்பற்றி விக்ரமசிங்குடன் நடத்திய விசாரணையில் தன்னுடைய கனவில் சிவன் தோன்றியதாகவும் அவர் என்னுடைய ஆணுறுப்பை அறுத்து அவருக்கு காணிக்கையாக கொடுக்கும்படியும் சொன்னதாகவும் , இதனால் நான் எனது ஆணுறுப்பை அறுத்து அவருக்கு படையில் வைக்க முயற்சி செய்தேன் எனவும் விக்ரம் சிங் கூறினார். விக்ரம் சிங் ஒரு கொலை குற்றவாளி கைதி என்பதால் அவரை ஜெயிலுக்குல் உள்ளவர்கள் யாரேனும் கொலை செய்ய முயன்றார்களா என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து குவாலியர் சிறைத் துறை கண்காணிப்பாளர் கூறும்போது இந்த ஜெயிலில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு முன்பாக தான் அந்த கைதி ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே அவர் தனது ஆணுறுப்பை வெட்டும் செயலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.l