பச்சிளம் குழந்தையை கடித்தே கொன்ற எலிகள்! பிறந்த சில நாட்களில் ஹாஸ்பிடலில் ஏற்பட்ட பரிதாபம்!

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, எலிகள் கடித்துக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், பெங்களூருவின் வடக்கே உள்ள ஜலஹள்ளி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அங்குள்ள் போலீஸ் நிலையத்தை கூட்டிப் பெருக்கிய துப்புரவு தொழிலாளி, சல்மா, குறிப்பிட்ட குழந்தையின் சடலம், போலீஸ் நிலைய வளாகத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

உடனடியாக, அவர் போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் கூறவே, அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். அப்போது, குழந்தையை எலிகள் கடித்ததால், அலர்ஜி ஏற்பட்டு, அது இறந்துவிட்டதாக, தெரியவந்தது. குழந்தையின் சடலத்தில் ஆங்காங்கே காயங்களும் இருந்துள்ளன.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பின்னர், பரிசோதனை முடிந்ததும், ஜலஹள்ளி  சுடுகாட்டில், இறுதிச்சடங்கு செய்து, அந்த குழந்தையை அடக்கம் செய்தனர். எங்கோ ஒரு பகுதியில் இருந்து, எலிகள் ஒன்று சேர்ந்து, அந்த குழந்தையை கடித்து இழுத்து வந்திருக்கலாம், என்று போலீசார் குறிப்பிடுகின்றனர்.