டெல்லியில் பக்கத்து வீட்டுக் காரர்களுடன் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஒரு பெண் மற்றம் அவரது கணவன் உயிரிழந்தார். மகனும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடூர கத்தி குத்து! மனைவி, கணவன் பலி, மகன் உயிர் ஊசல்! தடுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்!
ஒருவர் சரமாரியாக
கத்தியால் குத்த மற்றொருவர் வெளியில் தொங்கும் உள்ளுருப்புகளோடு சாலையில்
கிடப்பதைக் நேரில் காண்பவர்களின் மன நிலை எப்படி இருக்கும் ? அப்படி ஒரு அனுபவத்தை
டெல்லியின் கையாலா பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்கொள்ள நேர்ந்தது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த
முகமது ஆசாத் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்கு அருகில் தெருவில் நின்று
கொண்டிருந்தார். அப்போது வீட்டு உரிமையாளரான வீருவின் மகள் பால்கனியில்
இருந்து தவற விட்ட பாட்டில் ஒன்று முகமது ஆசாத்தின் தலையில் விழுந்தது. இதனால்
ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற முகமது ஆசாத், வீருவின் மனைவி சுனிதாவிடம் தகராறு
செய்தார். இருதரப்பினரும் மாற்றி மாற்றி கத்தியதில் தகராறு முற்றியது.
அன்று தகராறு
முடிந்தாலும் புதன்கிழமையன்றும் மற்றொரு அல்பமான விவகாரத்தை சாக்காகக் கொண்டு
முகமது ஆசாத் வீரு குடும்பத்தினரை தகராறுக்கு இழுத்தார். இதையடுத்து சுனிதா தனது
கணவரையும் மகனையும் அழைக்க மூவரும் வெளியில் வந்தனர்.
அப்போது கத்தியுடன்
தயாராகக் காத்திருந்த முகமது ஆசாத் முதலில் வெளியில் வந்த வீருவின் மகன் ஆகாஷை
சரமாரியாக கத்தியால் குத்த ஆரம்பித்தார். இதையடுத்து வீருவும் சுனிதாவும் மகனைக்
காப்பாற்ற ஓடினர். அவர்களையும் முகமது ஆசாத் சரமாரியாக கத்தியால்
குத்தினார்.
இதில் சுனிதா சம்பவ
இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வீருவும் ஆகாஷும் கவலைக்கிடமான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வீருவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கத்தியுடன் காவல் நிலையத்துக்கு சென்ற முகமது ஆசாத் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.