மனித சடலத்தின் கைகளையும், விரல்களையும் வறுத்து ஃப்ரை செய்றார்..! கணவனின் செயலை பார்த்து அதிர்ந்து ஓடிய மனைவி!

உத்திரபிரதேசத்தில் கணவர் ஒருவர் இரவு உணவிற்காக இறந்தவரின் கைகளை கொண்டு உணவு சமைத்ததை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சியில் உறைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.


உத்திரப்பிரதேசத்தில் உள்ள டிகோபூர் என்ற கிராமத்தில் பிஜ்னோர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சஞ்சய் தன்னுடைய மனைவியுடன் என்பவர் வசித்துவருகிறார். 32 வயதாகும் சஞ்சய் தன்னுடைய வீட்டில் மனித கறியை கொண்டுவந்து இரவு உணவை சமைத்து இருக்கிறார்.

சஞ்சயின் மனைவி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பிய அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அவரது கணவர் சஞ்சய் இறந்துபோன ஒருவரது கைகளை கொண்டுவந்து அதனை இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தார்.

அந்த இறந்த உடல் பாகங்களிலிருந்து அழுகிய வாடையை கண்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். எங்கிருந்து அந்த வாடை வருகிறது என்று பார்த்து பொழுது அவரது வீட்டு சமையலறையில் இருந்த பாத்திரத்திலிருந்து வந்துள்ளது. 

தன் கணவர் சஞ்சய் தான் அந்த பாத்திரத்தில் மனித கைகளை வைத்து சமையல் செய்து இருக்கிறார் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அந்த பெண் தகவல் அளித்திருக்கிறார் தகவல் அறிந்து வந்த போலீசார் சஞ்சையை கைது செய்ய விரைந்துள்ளனர்.

போலீசார் வருவதை அறிந்து கொண்ட சஞ்சய் தன் வீட்டு கதவுகளை பூட்டி கொண்டு உள்ளே மறைந்திருக்கிறார். பின்னர் அவரை நீண்ட போராட்டத்திற்கு பின்பு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட தகவலில், சஞ்சய் அருகிலிருந்த உடல் தகனம் செய்யும் மனித உடல் பாகங்களை கொண்டுவந்து உணவு சமைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதற்கு முன்பு சஞ்சய் குடிபோதையில் தன்னுடைய சொந்த தந்தையையே தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பின்பு சஞ்சயின் மனைவி அவரது வீட்டிற்கு செல்லவே மிகுந்த பயத்துடன் காணப்பட்டார்.