தனியா பெண்கள் வந்தா போதும்..! பின்னால ஒரு தட்டு..! கட்டிப்பிடித்து ஒரு முத்தம்..! சைக்கோ இளைஞரின் வைரலாகும் வீடியோ உள்ளே!

மும்பையில் மதுங்காவில் ரயில்வே பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் பெண்களை அச்சுறுத்தியும் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக முத்தங்களை அளித்து வந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


அந்தவகையில் அந்த மர்ம ரயில்வே பாலத்தின் அருகில் நடந்து செல்லும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒருவர் நடந்து செல்லும்போது அவரை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

இம்மாதிரியான பாலியல் வன்கொடுமை சமாச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்துள்ளன. இந்த செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை போலீசார் அதிரடியாக நேற்றையதினம் கைது செய்துள்ளனர். கைது செய்து அந்த நபரை தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அப்படியாக விசாரிக்கும் பொழுது அந்த மர்ம நபர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரைஜூர் ஹபீபூர் கான் என போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரணங்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசார் திருட்டு வழக்கில் ரைஜூரை தற்போது கைது செய்துள்ளனர். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் வேண்டுமென்றாலும் அவர் மீது வழக்கு தொடரலாம் இன்று புகார் அளிக்கலாம் என காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர் இருப்பினும் இதுவரை அவன் மீது புகார் அளிக்க ஒருவரும் முன்வரவில்லை.

போலீசார் தற்போது கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை மையமாக கொண்டு ரைஜூரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.