வேகத்தடையில் ஏறி இறங்கும் போது தடுமாறிய பைக்..! கணவன் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி! கோர விபத்தின் சிசிடிவி!

கோவையில் லாரியின் பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த நிகழ்வின் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது.


கோவையில் மேட்டுப்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவரது மனைவி பெயர் பத்மா. அழகர்சாமி தன்னுடைய மனைவி பத்மாவுடன் செட்டிபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்த அழகர்சாமி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.

அதாவது இவர்கள் இருவரும் சென்ற இருசக்கர வாகனம் வேகத்தடையில் மீது ஏறி இறங்கியது. அப்போது அழகர்சாமி அவர்களின் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி அருகே வேகமாக வந்த லாரி டயருக்கடியில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் பத்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் பத்மாவின் உடலை கைப்பற்றி அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் அவரது கணவர் அழகர்சாமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கைப் போலீஸார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.