தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு தன்னுடைய கணவரிடம் இருந்து தனக்கு ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்களில் ஏக்கம்..! கால்களில் நடுக்கம்..! கைகளில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் ஆபிஸ் வந்த இளம் பெண்! ஏன் தெரியுமா?
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராவாரம் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறுவர். அந்த வகையில் பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி.
இவரும் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் பிரபலமானவை அளிப்பதற்காக அங்கு வந்திருந்தார். ராஜலட்சுமி வரும்பொழுது தன் கையில் மண்ணெண்ணெயோடு வந்திருந்தார். அப்போது அதனை பார்த்த ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நின்ற போலீசார் ராஜலட்சுமியை தடுத்து நிறுத்தி அவரது கையிலிருந்த கேனை வாங்கினர்.
பின்னர் எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட முயற்சி செய்தீர்கள் என போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் ராஜலட்சுமி தனக்கு நடந்த அனைத்தையும் பற்றி கூறினார். கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜலட்சுமி , மாது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்பு ராஜலட்சுமியின் கணவருடன் இரண்டு மகன்கள் வசித்து வருகின்றனர்.
ராஜலட்சுமி யுடன் ஒரு மகள் வசித்து வருகிறார். அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் ஆகையால் தன் கணவரிடம் இருந்து தனக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருக்கிறார். மேலும் இதற்காக தான் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததாகவும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் ராஜலட்சுமி விசாரணையின்போது கூறினார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.