ஆளுக்கு ஒரு நீதியா? ராகுல் பேச்சு செம வைரல்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு கார் ஓட்டியதில் ஏற்படுத்திய விபத்தில், பைக்கில் பயணித்த அனுஷ், கோஷ்டா ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்கள்.


மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு கார் ஓட்டியதில் ஏற்படுத்திய விபத்தில், பைக்கில் பயணித்த அனுஷ், கோஷ்டா ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்கள்.

கார் ஓட்டிய சிறுவன் காயமின்றி உயிர் தப்பினான். இவனுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்தது. அதோடு ஒரு கட்டுரை எழுதினால் போதும் என்றும் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பற்றி எரியும் நிலையில், ராகுல்காந்தியின் வீடியோ தீப்பிடித்துள்ளது.

அந்த வீடியோவில், ‘வணக்கம். நான் ராகுல் பேசுகிறேன். பஸ் ட்ரைவரோ, ட்ரக் ட்ரைவரோ, ஆட்டோ ட்ரைவரோ உபெர் ட்ரைவரோ விபத்து ஏற்படுத்தினால் பத்தாண்டு சிறை தண்டனை கிடைக்கிறது. வண்டி சாவி பிடுங்கி எறியப்படுகிறது.

16-17 வயது பணக்கார வீட்டுப்பையன் குடித்துவிட்டு போர்ச் வண்டியை ஓட்டி இரு உயிர்களை கொல்கிறான். அவனை விபத்துகள் குறித்து கட்டுரை எழுத சொல்கிறார்கள். இதுதான் தண்டனையா?

பணக்காரனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு ஒரு நியாயமா? மோடியிடம் ஒரு நிருபர் கேட்டார். ஏழை பணக்காரன் வேறுபாடு அதிகரிக்கிறதே என. அதற்கு மோடி அப்படியானால் எல்லாரையும் ஏழையாக்கி விடுவோமா எனக்கேட்கிறார். இதை களைய வேண்டும். அதற்காகத்தான் நானும் காங்கிரஸும் இந்தியாக் கூட்டணியும் போராடுகிறோம். அனைவருக்கும் சமமான நீதி பரிபாலனம் நடக்கவேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.

மக்களுக்காக பேசும் அரசியல்வாதி என்று மக்கள் பாராட்டி வருகிறார்கள்.