திடீரென வெடித்துச் சிதறிய பிரமாண்ட காற்றாழை எந்திரம்! பதறிய பொதுமக்கள்!

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 2000 மேற்பட்ட காற்றாலைகள் சுழன்று வருகிறது.


நேற்று காலையில் தாராபுரம் அருகே உள்ள தாசர் பட்டி பகுதியில் திடீரென ஒரு காற்றாலைகள் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வெடித்து சிதறியது.  இந்நிலையில் இதன் பாகங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் வரை சிதறி உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள காற்றாலைகள் சில நிறுவி 20 முதல் 30 ஆண்டுகள் ஆனவை இந்நிலையில் இன்று அடித்த பலத்த காற்றினால் அப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலை மிக வேகமாக சுழல ஆரம்பித்ததும் பின்னர் திடீரென தீப்பிடித்தது உடனே அதிர்ச்சி அடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

இதை தொடர்ந்து காற்றாலை வேகமாக சுழன்று கொண்டிருந்த நிலையில் காற்றாலையில் உள்ள ஆயில் கொட்டி நெருப்பு வேகமாக காற்று அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் காற்றாலை வெடித்துள்ளது. இந்நிலையில் இதன் பாகங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சிதறியுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் .

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இது குறித்து பொதுமக்களிடையே கேட்டபோது அவர்கள் பழைய காற்றாலைகளை அதன் நிறுவனத்தினர் முறையாக பராமரிப்பதில்லை எனவும் இதனால் இப்பகுதியில் காற்றாலைகள் வெடித்து அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.