கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான நடிகை! அந்தரங்கத்தை போட்டு உடைத்த கணவன்!

தனது மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாக அவரது கணவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


இந்தி  திரையில் கவர்ச்சி நடிகையாக அறிமுகம் ஆகி நடிக்க தெரிந்த நடிகை என தற்போது பெயர் எடுத்திருப்பவர் நேஹா தூபியா. லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் நெட்பிலிக்ஸ் ஒரிஜினல் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் நேஹா தூபியா. அந்த படத்தில் மிகவும் துணிச்சலாக சுய இன்ப காட்சியில் நேஹா தூபியா நடித்திருப்பார். அதன் பிறகு தற்போது நேஹா தூபியாவிற்கு வாய்புகள் குவிந்து வருகின்றன.

   இந்த நிலையில் கடந்த ஆண்டு திடிரென நேஹா தூபியா தன்னை விட வயதில் இளையவரான அங்கத் பேடி எனும் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். மிக அவசர அவசரமாக இந்த திருமணம் நடைபெற்றது. நேஹா திருமணத்திற்கு தன்னுடைய நெருங்கிய நண்பர்களை கூட அழைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அப்போதே அரசல் புரசலாக கிசுகிசுக்கள் கிளம்பின. அதாவது காதலர்களாக பழகி வந்த அங்கத் பேடி – நேஹா ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் நேஹா கர்ப்பமானதால் அவசர கல்யாணம் நடைபெற்றதாக கூறப்பட்டது.

   ஆனால் இந்த தகவலை அப்போது நேஹாவின் தந்தை மறுத்தார். ஆனால் நேஹா – அங்கத் பேடி திருமணம் நடைபெற்று ஆறு மாதங்களில் நேஹா அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் நேஹா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாக வெளியான தகவல் உறுதியாது. இது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக நேஹா தூபியாவின் கணவர் அங்கத் பேடி விளக்கம் அளித்துள்ளார்.

   தானும் நேஹாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தது உண்மை தான் என்றும் அங்கத் தெரிவித்துள்ளார். இதனால் நேஹா கர்ப்பமானதாகவும் அந்த குழந்தை தங்களுக்கு வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாகவும் இதனால் தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அங்கத் கூறியுள்ளார். திருமணத்திற்கு முன்பே நேஹா 3 மாத கர்ப்பம் என்பது உண்மை தான் என்றும் அங்கத் கூறியுள்ளார்.

   பரஸ்வரம் மனம் ஒத்து தங்களுக்கு உருவான குழந்தையை தாங்கள் எதிர்மறையாக பார்க்கவில்லை என்றும் அங்கத் விளக்கம் அளித்துள்ளார். எது எப்படியே திருமணத்திற்கு முன்பே நேஹா கர்ப்பம் என்கிற தகவலை வெளிப்படையாக கூறியுள்ள அங்கத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.