பிரபல தொலைக்காட்சி உரிமையாளர் மர்ம மரணம்! காரில் சடலமாக கிடந்தார்!

தனியார் தொலைக்காட்சி நிறுவன அதிபர் மர்மான முறையில் காரில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஜெயராம் சிவகுருபதி. எக்ஸ்பிரஸ் டிவி என்ற தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்த இவர் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டதால், ஓரு ஆண்டுக்கு முன் தொலைக்காட்சி நிறுவனத்தை மூடிவிட்டார்.

 

  ஊழியர்களுக்கு ஊதியம் தராததால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வந்தார். 

 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் ஆந்திராவின் அய்தாவரம் என்ற கிராமத்தில் ஒதுக்குப் புறமன ஒரு இடத்தில் அவரது கார் விபத்துக்குள்ளாகிக் கிடந்ததது. காருக்குள் இருந்து பலத்த காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டது.

 

  சம்பவம் நடப்பதற்கு இரு நாட்கள் முன்பு தனது வீட்டில் இருந்து அவர் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேசிய அவர் விஜயவாடாவுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்ததாக அவர்கள் கூறுகின்றனர். 

 

இதனிடையே அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கார் கிடந்த சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயராம் தவிர  காரில் மற்றொரு நபரும் காரில் இருந்ததாகவும், அவர்தான் காரை ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

 

ஆனால் விபத்துக்குள்ளான காரில் ஜெயராம் தவிர வேறு எவருமோ இறந்த உடலோ கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் காரின் பின் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் ஜெயராமின் உடல் கிடந்த விதம் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளதால் பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.