சிறுமிகளுக்கு ஆபாச படம் காட்டுதல்! தவறான இடத்தில் டச்சிங்! டான்ஸ் மாஸ்டருக்கு நேர்ந்த பரிதாபம்!

சிறுமிகளை தவறான இடங்களில் தொட்டதோடு அவர்களுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய நடன ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


புனேவின் புறநகர் பகுதியான ஹடப்சரில் நடன ஆசிரியர் ஒருவரிடம் பல சிறுமிகள் நடனம் பயின்றுவந்தனர். சிறுமிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டிய அவர், நடனம் கற்றுக்கொடுப்பது போல சிறுமிகளை தவறான இடங்களில் தொட்டதாகக் கூறப்படுகிறது.

 

   மேலும் விவரம் புரியாத சிறுமிகள் என்பதால் அவர்களை அவர் மிரட்டி வைத்திருந்ததால் அவர்கள் வெளியில் சொல்ல அஞ்சிவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 13 வயதுச் சிறுமி ஒருவர் தான் மற்றும் தனது தோழிகளின் நிலையை தனது தாயாரிடம் கூறினார்.

 

   இது பல சிறுமிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால் சிறுமியின் தாய் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் துணையுடன் ஹடாப்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நடன ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் , அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

 

அதேபோன்று சிக்கிம் மாநிலம் பாக்யாங் நகரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 6 வயதுச் சிறுமி பள்ளி விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் விடுதியின் பொறுப்பாளராகவும் இருந்த ஆசிரியர் சிறுமியை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

   சிறுமி தனக்கு நேரும் கொடுமையை தனது மூத்த சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து அழுதார். இதையடுத்து அவர்களது பெற்றோருக்கு விவரம் தெரிந்து. அவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

இந்த இரு வழக்குகளிலும் தெரிய வருவது ஒன்றுதான். பெண்குழந்தைகளை உரிய பாதுகாப்பளிக்காமல் தனியாகச் செல்லவும், தனியாக தங்கவும் இடமளிப்பதோடு தங்களுக்கு நேர்ந்ததை சொல்லத் தயங்கும் அளவுக்கு மன இடைவெளியை ஏற்படுத்தும் பொறுப்பற்ற பெற்றோரே இதற்கெல்லாம் காரணமாக உள்ளனர்.