டார்கெட்டை நிறைவேற்றாத ஊழியர்களை, நான்கு காலில், ரோட்டில் தவழ்ந்து வரும்படி ஒரு தனியார் நிறுவனம் தண்டனை விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விநோத தண்டனை! ஊழியர்களை சாலையில் தவழ விட்ட பிரபல நிறுவனம்!
தனியார் துறையில்
பணிபுரிவது ஒன்றும் எளிதான விசயம் அல்ல. டார்கெட்டை நிறைவேற்றுவதற்காக, அவர்கள்
கூடுதல் நேரம் பணிபுரியவும், நிறைய சவால்களை சந்திக்கவும் நேரிடுகிறது.
இதற்கு சமீபத்திய
உதாரணமாக, சீனாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஊழியர்கள் டார்கெட்டை
எட்ட முடியாமல் போனால், அவர்களுக்கு ஊதிய உயர்வை குறைப்பது அல்லது சம்பள பிடித்தம்
செய்வதுதான் வாடிக்கை.
ஆனால், சீனாவை சேர்ந்த
ஒரு தனியார் நிறுவனம், டார்கெட்டை நிறைவேற்ற தவறிய தனது ஊழியர்களுக்கு விநோதமான
தண்டனையை
அளித்துள்ளது.
ஆம். ஊழியர்களை நான்கு
காலில், ரோட்டில் தவழ்ந்து வரும்படி அந்நிறுவனம் கட்டளையிட்டுள்ளது. ஊழியர்கள்
சிரமப்பட்டு, கை, காலை தரையில் ஊன்றி, ரோட்டில் தவழ்ந்து செல்லும் அந்த காட்சி
படம்பிடிக்கப்பட்டு,
தற்போது சமூகஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ பல
தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இதுபற்றி காரசார
விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மனிதாபிமானம் இல்லாத வகையில், மனிதன் தனது சக
மனிதனை
இப்படி சுரண்டுவதும்,
சித்ரவதைப்படுத்துவதும் கண்டிக்கத்தக்கது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கம்யூனிச நாடாக தன்னை பறைசாற்றிக்
கொள்ளும் சீனா, சுதந்திரம், சகோதரத்துவம் போன்ற தனிமனித உரிமைகளை மறுக்கும் இடமாக
மாறியுள்ளதாகவும், சிலர் கண்டித்துள்ளனர்.