15 வயதில் கல்யாணம்! பயத்தில் அஞ்சி நடுங்கி மோனிஷா எடுத்த விபரீத முடிவு! என்ன காரணம் தெரியுமா?

9-ஆம் வகுப்பு மாணவி திருமணத்துக்கு பயந்து தற்கொலை செய்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் மூனாங்கரடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கந்தம்மாள். இத்தம்பதியினருக்கு மோனிஷா என்ற மகளுள்ளார்.

இவர் சேலம் மாநகராட்சி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று முருகேசன் உடல்நலம் குன்றினார். உடனடியாக மோனிஷாவின் தாயாரும்,உறவினர்களும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று மோனிஷாவுடன் இதுப்பற்றி ஆலோசித்தனர். ஆனால் தனக்கு தற்போது திருமணம் வேண்டாமென்றும், தான் நிறைய படிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு அவருடைய தாயார் ஒப்புக்கொள்ளவில்லை. 

அன்று மாலையே அவருடைய துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மோனிஷாவின் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மோனிஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.