9 வயதில் 190 நாடுகள்! காண்போரை அசர வைக்கும் பள்ளிச் சிறுவன்!

ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுவன் உலக வரைபடத்தை பார்த்து 190 நாடுகளின் பெயர்களை தெரிவிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


நாடுகள் மட்டுமின்றி அந்த நாட்டிற்கான தேசிய கொடியையும் சரியாக சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான் 9 வயது சிறுவன் ஆகாதீஷ். இது குறித்து ஆகாதீஷின் தாயர் தெரிவித்தபோது 7 வயதில் மனப்பாடம் செய்யத் தொடங்கியதாகவும் 2 வருடத்திலேயே 190 நாடுகளில் பெயர்கள் மற்றும் கொடிகளை அடையாளம் காட்டுவதாகவும் கூறினார்.

முதலில் தமிழ்நாட்டு வரைபடத்தை வாங்கித் தருமாறு ஆகாதீஷ் கேட்டுக் கொண்டதாகவும் படிப்படியாக, உலகெங்கிலும் உள்ள இடங்கள், பெயர்கள் மற்றும் கொடிகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார் சாவித்ரி. மேலும் புவியியலில் மகனுக்கு அதிகம் ஆர்வம் உள்ளதாகவும் எனவே அது தொடர்பான அட்லஸ், புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ஆகாதீஷ் தந்தை கூறும்போது குழந்தைகள் செய்யும் தவறுகளை குறையாக கருதாமல் அவர்களுடைய திறமைகளை கண்டறிந்து தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். சதீஷ்குமார், சாவித்திரி தம்பதியின் மகன் ஆகாதீஷுக்கு அவரது புவியியல் ஆர்வத்தை பாராட்டி ஈரோடு பாரதி வித்யா பவன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.

9 வயது சிறுவன் உலகத்தை நாடுகள் பெயரை சொல்லி அசத்துவது ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் விரைவில் உண்மையாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.