பெற்ற மகளையே, பலாத்காரம் செய்ய முயன்ற தந்தைக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெற்ற மகளுடன் தகாத உறவு! தந்தைக்கு கிடைத்த தரமான தண்டனை!

டெல்லியில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 38 வயதாகும், அந்த நபர், ஒரு கூலித்தொழிலாளி ஆவார். அவர், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது 9 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றபோது, பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து, கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபரை அனைவரும் சேர்ந்து சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், குறிப்பிட்ட நபர், ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக, தனது பெண்ணையே பலாத்காரம் செய்து வந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரது மனைவி போலீசில் புகார் அளிக்கவே, அவர் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம், அந்த நபருக்கு, ரூ.60,000 அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தவிர, அந்த நபரின் மனைவி மற்றும் குழந்தையின் நலனை கருத்தில்கொண்டு, அபராதத் தொகையில் இருந்து ரூ.5 ஆயிரமும், கூடுதலாக, ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படுவதாக, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.