டிரைவர் அலட்சியம்! தலை குப்புற கவிழ்ந்த ஸ்கூல் வேன்! 2ம் வகுப்பு மாணவனின் ஒரு கை துண்டான பயங்கரம்! மதுரை பரபரப்பு!

பள்ளி வேன் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 வயது சிறுவனின் கை உடைந்துள்ள சம்பவமானது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் அழகுமலர் மெட்ரிக் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். மேலூர், சுண்ணாம்புர் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் பயின்று வரும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி நிர்வாகம் வேன்களை இயக்கி வருகிறது.

நேற்று காலை வழக்கம்போல பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்காக மேலூர் மற்றும் சுண்ணாம்புர் ஆகிய கிராமங்களுக்கு வேன் சென்றுள்ளது. குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் வழியில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து வேன் விலகியுள்ளது.

தடுமாறி சென்றுகொண்டிருந்த தான் முட்புதரில் சிக்கி கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வேனில் பயணம் செய்த 3-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை அனைவரை காட்டிலும் படுகாயமடைந்தது.

உடனடியாக குழந்தையை காப்பாற்றுவதற்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வலது கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் குழந்தையின் வலது கையை வெட்டியுள்ளனர்.

தற்போதும் குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தையை காப்பாற்றிய காது மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேக் பிடிக்காததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஓட்டுனர் மீது இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.