நம் தாத்தாக்களின் கனவுக் கன்னி..! 3 மாநிலங்களை கிறங்கடித்தவர்..! 72 வயதில் காலமான நடிகை!

பழம்பெரும் நடிகையான கீதாஞ்சலி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினர் ஐ பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நடிகை கீதாஞ்சலி (72 வயது) பழம்பெரும் நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் நடித்து மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஆவார். சாரதா ,தெய்வத்தின் தெய்வம் ,ஆசை முகம், படகு ,என் அண்ணன் ,அண்ணமிட்ட கை, என ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் ஆவார்.

நடிகை கீதாஞ்சலி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ,இந்தி என பல மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். தற்போது நடிகை கீதாஞ்சலி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். ஆகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்க திடீரென்று இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக நடிகை கீதாஞ்சலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரை உலகில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கீதாஞ்சலி தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம கிருஷ்ணா அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Pic Courtesy: The New Indian Express