முதலில் பிரைவேட் ஹாஸ்பிடல்..! பிறகு கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்..! ஆனாலும் 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயதே ஆன சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அச்கோக் நகரை சேர்ந்த கண்ண தாசன் - மாலதி தம்பதியுனரின் மகள் திவ்ய தர்ஷினி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தொடர் சிகிச்சைக்கு பின்னதாக சிறுமிக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரி சோதனைகள் நடத்தபட்டதை அடுத்து, சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது..

இதனை அடுத்து எழும்பூர் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு,  தீவிரமான சிகிச்சை கொடுக்கபட்டு வந்த நிலையில், சிறுமி திவ்ய தர்ஷினி சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு பலியாகியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் தொடர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு சிறுமி இறந்துள்ளது குறிப்பிடதக்கது.