அம்மா அருகே நிம்மதியாக தூங்கிய 8 மாத குழந்தைக்கு அருகாமை பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்! அதிரவைக்கும் சிசிடிவி!

உத்தரபிரதேச மாநிலத்தில் தாய் அருகே உறங்கி கொண்டிருந்த குழந்தையை ஒரு ஆணுடன் வந்த பெண் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் கல்ஷாஹீத் பேருந்து நிலையத்தில் ஒரு தாயின் அருகே 8 மாத குழந்தை உறங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அங்கு ஒரு ஆணுடன் ஒரு பெண் வருகிறார். அங்கு தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் செல்ல மெதுவாக முயற்சிக்கிறார்.

அங்கு கேமரா இருப்பதை அறியாத அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக அந்த ஆண் நிற்க, எந்தவித பதற்றமும் இல்லாமல் சொந்த குழந்தையை எடுத்து செல்வது போல் வெகு இயல்பாக திருடி செல்கிறார். பின்னர் காலையில் கண் விழித்து பார்த்தபோது அருகில் குழந்தை இல்லாததை கண்டு தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுகிறார்.

பெண் ஒருவர் குழந்தையை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மக்கள் நடமாட்டம் இருந்தபோது குழந்தையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.