பழனி அருகே 7-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த தாயின் 2-வது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவியின் 12 வயது மகளை கர்ப்பமாக்கிய கணவன்!
பழனி அருகே உள்ள கிராமம் பெத்தநாயக்கன்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து உடல் நலக் கேடுகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்தச் சிறுமி பழனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கும், சிறுமியின் உறவினர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி கருவுற்றிருந்த செய்திதான் அது. பிறகென்ன வழக்கம்போல் ஒருபுறம் சிறுமிக்கு அர்ச்சனைகளும் கண்டனக் கணைகளும் தொடர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் மருத்துவமனை சார்பில் பழனி சார் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது
சார் ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியைன் தாயின் இரண்டாவது கணவரான காமராஜன் என்பவன் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் அதனால் சிறுமி கருவுற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து காமராஜன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர் .