7 ஆண்டுகளாக குழந்தை இல்லை! சாமியாரிடம் சென்ற இளம் பெண்! குழந்தை தருவதாக செய்த பகீர் செயல்!

திருமணம் செய்து பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு செய்வினைதான் காரணம் எனக்கூறி பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் ஆட்டைய போட்ட போலி சாமியாரை போலீஸ் தேடிவருகிறது.


இந்தச் சம்பவம் நடந்தது எங்கேயோ கிராமத்தில் அல்ல. தமிழ்நாட்டின் தலைநகரம், படித்தவர்கள் அதிகம் வாழும் சென்னை என செல்லமாக அழைக்கப்படும் மெட்ராஸில்தான். 

ஏமாறாதே… எமாறாதே… ஏமாற்றாதே… ஏமாற்றாதே என எத்தனை புரட்சித் தலைவர்கள் வந்து பாடினாலும், சதுரங்க வேட்டை போல் ஆயிரம் சினிமா எடுத்தாலும், மற்றவர்கள் ஏமாறுவதை எத்தனை முறை பார்த்தாலும் தான் ஏமாந்தால் மட்டுமே திருந்துவேன் என கூறுபவர்கள் இருக்கும் வகையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதற்கு இந்த பெண் ஏமாந்த சம்பவம் ஒரு உதாரணம்.

சென்னை கண்ணம்மாபேட்டையை சேர்ந்த செல்வி என்பவருடைய மகளுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதையடுதது மாலதி என்பவர் மூலம் செல்விக்கு அறிமுகமான சாமியார் ஒருவர் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு யாரோ செய்வினை வைத்துள்ளார்கள்.

அதை எடுத்தால்தான் குழந்தை பிறக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அந்த செய்வினையை நீக்க பூஜைகள் செய்ய 4 லட்சம் ரூபாய் ஆகும் என கூறியுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என பேரம் பேசிய செல்வி 1 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். 2 நிமிடங்கள் பேசியதற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கிறதே என்று சந்தோஷம் அடைந்த சாமியார் சரி என்று ஒத்துக்கொண்டு ஸ்டான்லி மருத்துவமனை அருகே வருமாறு கூறியுள்ளார்.

அங்கு செல்வி சென்றவுடன் அவர் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு இதோ வருகிறேன் என கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலி சாமியாரை உண்மையான போலீஸ் தேடி வருகிறது. இதில் செல்வி செய்த ஒரு உருப்படியான செயல் பேரம் பேசிய 4 லட்சம் ரூபாய்க்கு பதில் 1 லட்சம் தந்ததுதான்.

ஒருவேளை 4 லட்சம் கொடுத்திருந்தால் இன்னும் பெரிய இழப்பை சந்தித்திருப்பார். 4 லட்சம் கேட்டதற்கு வெறும் ஒரு லட்சம்தான் கிடைத்தது என்ற வேதனையோடு தலைமறைவான சாமியார் எங்கு யாருடன் உல்லாசமாக இருக்கிறாரோ?