வயிற்று வலியால் கதறிய மகள்..! ஸ்கேன் எடுத்து பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

வயிறு வலிப்பதாக கூறி அழுது வந்த 7 வயது சிறுமியின் வயிற்றில் காந்த உருண்டைகள் இந்த சம்பவமானது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆஸ்திரேலியா நாட்டின் ரெபிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் ஒலிவியா. ஒலிவியாவின் வயது 7. இவர் வீட்டில் தன்னிடம் இருந்தால் காந்த உருண்டைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார்.

வேறொரு அறையில் இருந்த தாயை ஒலிவியா கதறி அழைத்துள்ளார். விரைந்து சென்று பார்த்தபோது விளையாடிக்கொண்டிருந்த காந்த உருண்டைகளை விழுங்கிவிட்டதாக ஒலிவியா கூறியுள்ளார்.

உடனடியாக ஒலிவியாவின் தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில், சிறுமியின் உடலில் சிறுசிறு உருண்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். அவை செரிமான குடலில் போய் அடைத்து கொண்டதால் சிறுமியால் எதையும் செய்ய இயலாமல் போனது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் காந்த உருண்டையை வெளியே எடுத்துள்ளனர். 

தடைசெய்யப்பட்ட காந்த உருண்டைகள் ஆன்லைனில் கிடைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்று அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரமானது அந்நாட்டில் பெரிதும் வைரலாகியுள்ளது.