கல்வி நிறுவன அதிபரின் பாலியல் வக்கிரத்தில் சிக்கிய ஏழு மாணவிகள்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

இலங்கையில் 7 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் தனியார் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை கொத்மலை பகுதியில் உள்ளது ஒருதனியார் பள்ளி. இந்த தனியார் பள்ளியின் உரிமையாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் 7 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரச்சனை பூதாகரம் ஆனது.

அந்த மாணவிகள் பெற்றோரிடம் தகவல் அளிக்க காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி உரிமையாளர் மீது வழக்குப்பதிந்த காவல்துறை தீவிர விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் அந்த நபர் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அக்டோபர் 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பள்ளி உரிமையாளரால் பாதிக்கப்பட்ட 7 மாணவிகளுக்கும் மருத்தவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். அதாவது மாணவிகள் கூற்றில் உண்மை இருக்கிறதா என கண்டறிய இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மாணவிகள் சரியாக படிக்க வில்லை என கண்டித்ததால் வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுவாயினும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு யார் சொல்வது உண்மை, யார் குற்றவாளி என்பது தெரியவரும் என சட்டநிபுணர்கள் கருத்த தெரிவித்தனர்.