சாதாரண காய்ச்சல்னு நினைச்சோம்..! ஆனா டெங்குனு பிறகு தான் தெரிஞ்சது..! 6 வயது மகனை பறிகொடுத்து கதறும் தம்பதி!

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இருந்துள்ளார்.


தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவருக்கு நதியா எனும் பெண்ணுடன் திருமணமாகி 6 வயதில் நிவாஸ் எனும் சிறுவன் இருக்கிறான்.  நிவாஸ் தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருக்கு திடீரென காய்ச்சல் வந்ததால், அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு பரிசோதித்து பார்த்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி ஆனது. 

உயர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் சுரேஷ் மற்றும் நதியா இருவரும் கதறி அழுததால், மருத்துவமனையை சோகமயம் ஆனது.