2 மில்லியன் பணத்திற்காக 6 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவமானது தென்னாப்பிரிக்கா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை உயிருடன் வர வேண்டும் என்றால் 2 மில்லியன் டாலர்! தாயிடம் நின்று கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!
தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் ஏஞ்சலின் டி ஜாகர். இவருடைய மகளின் பெயர் ஆமி-லீடி-ஜாகர். ஆமியின் வயது 6. சில நாட்களுக்கு முன்னர் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக ஏஞ்சலின் சென்றுள்ளார். ஏஞ்சலினுக்கு இன்னும் ஒரு மகனுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளியிலிருந்து குழந்தைகள் ஓடி வந்து கொண்டிருந்தனர். ஆமி எதிரே இருந்த தன்னுடைய தாயார் ஏஞ்சலினை கண்டு அவரிடம் ஓடினார். அப்போது காரிலிருந்த மர்ம நபர்கள் ஏஞ்சலினிடமிருந்து குழந்தையை தூக்கி கடத்தினர். தன்னுடைய குழந்தையை காப்பாற்றி தருமாறு அதே இடத்தில் ஏஞ்சலின் கதறி அழுதார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே ஏஞ்சலின் என் கணவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது, "உங்களது மகளை பத்திரமாக திருப்பி தரவேண்டும் என்றால் 2 மினியன்ஸ் பணத்தைத் தரவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. ஆமியின் தந்தை ஃபார்முலா ஒன் கார் ஓட்டுநர் என்பதால் அவரிடமிருந்து பணத்தை பெறுவதற்கே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக தம்பதியினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுமி திட்டமிட்டு கடத்தப்பட்டு இருக்கிறார். பல நாட்களாக சிறுமியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் தம்பியை விட்டு அவரை மட்டும் கடத்தியிருப்பதால் உள்நோக்கம் உள்ளதா என்ற ரீதியில் விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
இந்த சம்பவமானது தென்னாப்பிரிக்கா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.