பரமத்தி வேலூர் பரிதாபம்! அடுத்தடுத்து 6 பேர் காவிரி ஆற்றில் மூழ்கியது இப்படித்தான்! சற்று முன் வெளியான திடுக் தகவல்!

காவிரி ஆற்றில் சிக்கி ஒரே நாளில் 6 பேரும் உயிரிழந்தது குறித்து திடுக் தகவல் வெளியாகியுள்ளது.


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு தாரகேஷ், தீபகேஷ்என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள்.  ஜோதிமணியும், ஜேடர் பாளையத்தை சேர்ந்த தேவிஸ்ரீயும் தோழிகள். இவருக்கு ஹஸ்விகா என்ற மகள் இருந்தாள்.

நேற்று தேவிஸ்ரீ தனது மகள் ஹஸ்விகாவுடன் பொத்தனூரில் உள்ள ஜோதிமணி வீட்டுக்கு வந்தார். பின்னர் சரவணன் குடும்பத்தினர் மற்றும் தேவிஸ்ரீ, அவரது மகள் ஹஸ்விகா ஆகியோரும், சரவணனின் அண்ணன் தனசேகரனின் மகன் ரோகித் (12) என்ற சிறுவனும் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அங்கு ரோகித் உடைமைகளை கவனித்து கொண்டு கரையில் அமர்ந்து இருந்தான். சரவணன் உள்ளிட்ட 6 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தாரகேஷ், தீபகேஷ் மற்றும் ஹஸ்விகா ஆகியோர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்த அவர்களை காப்பாற்ற சரவணன் மற்றும் ஜோதிமணி, தேவிஸ்ரீ ஆகியோரும் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். சரவணன் உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் ரோகித் இதுகுறித்து செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தான். ஆனால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை.