இந்தில பேசுனதும் குழந்தை எட்டிப் பார்த்தது! எங்களுக்கு பொறி தட்டிச்சி! நர்ஸ் கொடுத்த தகவலால் மீட்கப்பட்ட குழந்தை! சென்னை பரபரப்பு!

ஆண் குழந்தை மோகத்தால் சென்னை மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மீட்டனர் காவல்துறையினர்.


சென்னை மெரினாவில் பலூன் விற்கும் ஜான்போஸ்லே, ரந்தீஷா என்ற வடமாநில தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தம்பதியிடமிருந்து 7 மாத ஆண் குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். இதற்கிடையில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் குழந்தையை கடத்தியுள்ளார். 

மேலும், குழந்தைக்கு ரேவதி புட்டி பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தைக்கு சுமார் 6 மாதங்கள் இருக்கும். அதனால், நர்ஸ்க்கு அந்தப் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இந்த மருத்துவமனையில் குழந்தைக்கு தாய் பால்தான் கொடுப்பார்கள். அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது உடனே நர்ஸ் அந்தப் பெண்ணிடம் விசாரித்தார். அப்போது அவர், எனக்கு சில மாதங்களுக்கு முன் இங்குதான் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. சிகிச்சைக்காக வந்துள்ளேன் என்று கூறினார். அப்போது இரவு நேரம் என்பதால், அட்மிஷன் போடாமல் வார்டில் நீங்கள் இருக்கக் கூடாது என்று கூறி உள்ளார் நர்ஸ்.

சந்தேகத்தின் காரணமாக அந்தப் பெண் குறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தார் நர்ஸ். இதையடுத்து அந்தப் பெண் மறுநாள், பெண் குழந்தை என்று பதிவு செய்திருந்தார். மேலும், பெயரை சாம் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், கடந்த 18-ம் தேதி காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர். அப்போது நர்ஸ் ஆவர்கள், 14-ம் தேதி இரவு குழந்தையையும் அந்தப் பெண்ணையும் பார்த்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உடனே காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பெண்தான் குழந்தையைக் கடத்திக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர்2 விசாரித்தனர். அப்போதுகூட அந்தப் பெண், `இந்தக் குழந்தை என்னுடையது' என்று அழுதார். ஆனால், அந்தக் குழந்தை மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இந்நிலையில், மருத்துவமனையின் தலைமை நிர்வாகி ஒருவர், இந்தியில் பேசினார். உடனே அந்தக் குழந்தை தலையைத் தூக்கி சத்தம் வருவதைக் கவனித்தது. அதனால், அந்தக் குழந்தைக்கு தமிழ் தெரியாது, இந்தியில் பேசினால் கவனிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். 

இதற்கிடையில் காவல்துறையினர், குழந்தையின் பெற்றோரை அங்கு வரவழைத்தனர். அவர்களைப் பார்த்ததும் அந்தப் பெண்ணிடமிருந்த குழந்தை, உண்மையான தாயிடம் சென்றது. இதையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.