6 அடி நீளம்! ஆஜானு பாகு உடல்! குடியிருப்புக்குள் சீறிய பாம்பு! குலை நடுங்கிப் போன மக்கள்!

வேலூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் 6 அடி பாம்பு ஒன்று நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 சமீபகாலமாக கோயம்புத்தூர் உள்ளிட்ட மழை வனப்பகுதிகள் இருக்கும் இடங்களில் ராஜநாகம் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வசித்து வருபவர் கோதண்டராமன்.

இவரது வீட்டிற்குள் இன்று காலை 6 அடி பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. .அதை கண்டு பதறிய அவர் அதனை விரட்ட அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பாம்பைக் கண்டால் படையே அஞ்சி நடுங்கும் என்பதற்கு உதாரணமாக கிராம மக்கள் அனைவரும் பாம்பை விரட்ட வர மறுத்துவிட்டனர்.

இதை அடுத்து கிராம மக்களின் உதவியை எதிர்பார்த்தால் பாம்பை விரட்ட முடியாது என்பதை உணர்ந்த கோதண்டம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பாம்பை பிடித்து வனப்பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின் வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

மேலும் அக்கிராமம் குழந்தைகள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் பாம்பு குழந்தைகளை கடித்து விடக் கூடாது என்ற அச்சம் பாம்பை பிடிக்கும் வரை அப்பகுதி மக்களிடையே இருந்து வந்தது.