குட்டீச பெத்தவங்க, பொறுப்பு இல்லாம சுத்தாதீங்க..! 5ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வந்தாச்சு.

மத்திய அரசு எள் என்றால் எண்ணெய்யாக நிற்பதுதான் தமிழக அரசின் வழக்கம். தேசியக் கல்வி கொள்கை குறித்து கடும் விமர்சனம் எழுந்த நேரத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு இப்போது தேர்வுகள் நடத்தப்படாது. குறைந்தது மூன்று ஆண்டு காலம் விலக்கு கேட்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


அவர் சொன்னதை அப்படியே காற்றில் பறக்கவிட்டு, இந்த கல்வியாண்டில் இருந்தே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு இருக்கிறது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். 

மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை 5, 8-ம் வகுப்பு போதிக்கும் அந்தந்த பாட ஆசிரியர்களை கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் பட்டியல்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்குரிய மதிப்பெண்ணை பாடவாரியாக மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்து, கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவித்து உள்ளனர்.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் நாயாய் அலைந்தது போன்று இனி 5ம் வகுப்பு மாணவர்களின் அலைச்சலையும் பார்க்கலாம்.

தேர்வில் தோற்றுப்போன மாணவர்களை ஃபெயில் ஆக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ஆனால் இவர்கள்தான் சொன்னதை செய்ய மாட்டார்களே..