நாகப்பட்டிணம்: கள்ளக்காதலியின் கணவரை ஆள் வைத்துக் கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
58 வயது அமீர்கானுக்கு இளம் கள்ளக் காதலி! இடையூறாக இருந்த கணவன் மர்ம மரணம்! 4 மாதங்களுக்கு பிறகு அம்பலமான பகீர் தகவல்!
தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரை, கடந்த ஜூலை மாதம் மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்றனர். இதுபற்றி உள்ளூர் போலீசார் சரிவர விசாரிக்காமல் வழக்கை மூடுவதாகக் கூறினர். இதன்பேரில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ராஜகோபால் குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவிக்கவே, இந்த வழக்கை மயிலாடுதுறை எஸ்பி விசாரிக்க தொடங்கினார்.
இதன்போது, ராஜகோபாலின் மனைவி ஷீலாதேவிக்கு கள்ளக்காதல் இருந்ததாகவும், அதன்பேரில்தான் இந்த கொலை நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. ஷீலாதேவியின் கள்ளக்காதலனுக்கு வயது 54. அமீர் கான் என்ற அந்த நபர் அப்பகுதியில் கூட்டுறவு வங்கி செயலாளராக இருந்தவர்.
அத்துடன், அவர் பெரும் பணக்காரர் எனக் கூறப்படுகிறது. தனக்கு இருந்த பண பலத்தை வைத்து, கூலிப்படை தயார் செய்து, தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஷீலாதேவியின் கணவர் ராஜகோபாலை அமீர் கான் கொன்றிருக்கிறார். பிறகு, கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
அவரது பணத்திற்கு விலைபோன உள்ளூர் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. எனினும், தற்போது மயிலாடுதுறை எஸ்பியின் உத்தரவுப்படி அமீர் கானை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவிகரமாகச் செயல்பட்ட மேலும் 4 பேரை தேடிவருகின்றனர்.