முதலில் தந்தை! பிறகு மகன்! 2 பேரும் சேர்ந்து இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய விபரீதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் 55 வயது தந்தையும், 19 வயது மகனும் சேர்ந்து தங்கள் வீட்டில் தங்கியிருந்த 17 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


பாதிக்கப்பட்ட சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை மதுவுக்கு அடிமை என்பதால் பல்கர் மாவட்டம் வசாய் என்ற இடத்தைச் சேர்ந்த உறவினர்களான குற்றவாளிகளின் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் தந்தையும், மகனும் அந்தசி சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் தற்போது அந்தச் சிறுமி கருவுற்றுள்ளார். 

இது தொடர்பாக அந்தச் சிறுமி அளித்த புகாரின் பேரில் தந்தை மற்றும் மகன் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் அத்துமீறல், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.