துண்டு துண்டாக்கப்பட்ட உடல்! வீட்டுக்குள் வைத்து சிமெண்ட் பூச்சு! சரோஜினி கொலையாளிக்கு தூக்கு!

பெண்ணொருவரை நகைக்காக கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2013-ஆம் ஆண்டு நவம்பர் 21 -ஆம் நாள் கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது. அவிநாசி சாலையிலுள்ள ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில்  சரோஜினி என்ற 54 வயது பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்த நபர் அவரின் உடலை ஏழு துண்டுகளாக வெட்டி 2 சூட்கேஸ்களில் அடைத்து பரண் மீது போட்டிருந்தார். மேலும் தொடைப்பகுதி சூட்கேசுக்குள் நுழையாததால் பிளாஸ்டிக் பையில் கட்டி பரண் மீது வீசினார்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அக்கம் பக்கத்தினருக்கு சரோஜினியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. காவல்துறையினர் சரோஜினியின் வீட்டை பரிசோதனை செய்த அப்போதுதான் அவர் இறந்த செய்தி ஆனது அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது.

உடனடியாக காவல்துறையினர் கிடைத்த உடற்பாகங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிற்குள் உடல் பாகங்களை சிமெண்ட் கலவை வைத்து புதைத்திருந்ததையும் கண்டறிந்து போலீசார் அதிர்ந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த யாசர் அராஃபத் என்பவரே இந்த கொலையை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த யாசர் அராபத்தை காவல்துறையினரும் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். கடந்த 6 வருடங்களாக இந்த வழக்கானது நடைபெற்று வந்தது. இன்று கோவை மாவட்டத்தின் 4-வது நீதிமன்ற கிளையில் வழக்கின் தீர்ப்பானது வெளிவந்தது.

12 பவுன் நகைக்காக சரோஜினி கொலை செய்த குற்றத்திற்காக யாசர் அராபத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நகைகளை திருடிய குற்றத்திற்காக 14 ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பானது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.