பால்கனி வழியாக நிர்வாணமாக நுழைந்தான்! நட்சத்திர ஓட்டல் அறையில் கணவனை பறிகொடுத்த பெண்மணியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

மதுபோதையில் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் தன் கணவரை கொலை செய்ததாக மனைவி கூறியது தாய்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இங்கிலாந்து நாட்டின் மேற்கு லண்டன் நகரை சேர்ந்தவர் அமித்பால் சிங். இவருடைய மனைவியின் பெயர் பந்தனா கவுர். இத்தம்பதியினருக்கு 2 வயதில் மகன் ஒருவன் உள்ளான். அமித்பால் சிங்குக்கு விடுமுறை என்பதால் குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றார்.

தாய்லாந்து நாட்டில் இந்த பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலான சென்டாரா 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையின் பக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மதுபோதையில் புலம்பி கொண்டிருந்தார். அவருடைய பெயர் ரோஜர் புல்மண். இவருடைய நடவடிக்கையானது அமித்பால் குடும்பத்தினருக்கு கடும் எரிச்சலை கிளப்பியது. 

இதனிடையே அமித்பால் தங்கியிருந்த அறையின் பால்கனி வழியாக ரோஜர் உள்ளே நுழைந்துள்ளார். இதனை கண்ட அமித்பால் கடுமையாக அதிர்ந்தார். மதுபோதையில் இருந்த ரோஜர் 3 பேரையும் தாக்குவதற்கு விரைந்தார். தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக அமித்பால் கத்தியால் ரோஜாவின் தோள்பட்டையில் குத்தியுள்ளார். 

மதுபோதையில் இருந்ததாலும், வலி அதிகமாக இருந்ததாலும் செய்வதறியாது ரோஜர் அமித்பாலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.  மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அமித் பால் தனது உயிரை தியாகம் செய்துள்ளார். 

அதன் பிறகே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பந்தனா கவுர் கூறுகையில், "ரோஜர் புல்மண் மதுபோதையில் நிர்வாணமாக அறைக்குள் நுழைந்து பயமுறுத்தினார். எங்களை காப்பாற்றுவதற்காக என் கணவர் முயற்சித்த போது அவரை ரோஜர் கொன்று விட்டார். எங்களை காப்பாற்றிய என் கணவர் தான் ரீயல் ஹீரோ" என்று கூறினார்.

இந்த சம்பவமானது தாய்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.