ஒரே நாளில் 5 ஆயிரம் ஊழியர்கள் வேலை பறிப்பு! ஜியோ பகீர் நடவடிக்கை!

ஒரே நாள் இரவில் 5 ஆயிரம் பேரின் வேலையை பறித்து reliance jio பகீர் நடவடிக்கை எடுத்துள்ளது.


நாடு முழுவதும் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோவும் ஒன்று. இந்த நிறுவனத்தில் நேரடியாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சுமார் இருபதாயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வந்தாலும் லாப சதவீதம் அளவிற்கு உயரவில்லை.

லாப சதவீதத்தை உயர்த்த செலவை குறைக்கும் நடவடிக்கைக்கு reliance jio வந்துள்ளது. இதற்கு காரணம் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ஆண்டுக்கு 131 ரூபாய் லாபம் கிடைக்கும் என்கிற கணக்கீடு 126 ரூபாய் குறைந்து விட்டது. இதனால் கூடுதலாக இருக்கும் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப ஜியோ முடிவு செய்து அதற்கான நோட்டீஸ் வழங்கி வருகிறது.

அதன்படி மார்க்கெட்டிங், மனித வளத்துறை, நிதி, நிர்வாகம் என அனைத்துத் துறைகளில் இருந்தும் கணிசமான அளவில் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளது ஜியோ. பணி நீக்கத்திற்கு ஆளான 5 ஆயிரம் பேரில் நிரந்தர பணியாளர்கள் 10% ஆகும். எஞ்சியவர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள்.

ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் ஜியோ நிறுவனத்திலிருந்து பணியை இழந்துள்ளனர்.