5 வயது பெண் குழந்தையை கொன்று கோழிப் பண்ணையில் புதைத்த கொடூரம்! பக்கத்து வீட்டு பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்! நெய்வேலி பரபர!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே 5 வயது குழந்தையை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தனது தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தம்பதியரின் 5 வயது மகளை கொலைசெய்து முந்திரி தோட்டத்தில் புதைத்துள்ளதாக கமலம் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர் இந்நிலையில் கொலையை ஒப்புக்கொண்டு பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் கல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் உத்தண்டி 35, இவரது மனைவி ராஜேஸ்வரி 32, மற்றும் இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நெய்வேலி அருகே உள்ள கமலம் 59 , என்பவரது தோட்டத்தில் தங்கி தோட்டவேலைகள் மற்றும் வீட்டு வேலைகளை பார்த்து வந்துள்ளனர். இவர்களது குடும்பம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியே செல்லாமல் தோட்டத்திலேயே அடிமை போல் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜேஸ்வரியின் இளைய மகளான மீனா என்பவரை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை தொடங்கும் போது தோட்டத்தின் உரிமையாளர் கமலம் என்பவரையும் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இந்நிலையில் அதற்கு அவர் முன்னும் பின்னுமாக பதிலளித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் அருகிலுள்ள முந்திரி தோட்டத்தில் மீனாவின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு துப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அதை வைத்து காவல் துறையினர் மீனாவின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து கமலம் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்துக்கொண்டு முந்திரி தோட்டத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியுள்ளார். மருத்துவரின் உதவியோடு குழந்தையை வெளியே தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில் கமலம் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது இந்த சம்பவத்தில் அவர்களுக்கு உதவியாக கமலத்தின் மகள் அஞ்சலை மற்றும் அவரது உறவினரான ஐயப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து தான் குழந்தையை புதைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணையில் கமலம் வாக்குமூலம் அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது:வீட்டின் மாடியில் மணிலா காய வைத்திருந்தேன். அதனை ராஜேஸ்வரியின் மகள் மீனா மிதித்து சேதப்படுத்தினாள்.

இதில் ஆத்திரம் அடைந்த நான் சிறுமி மீனாவின் தலைமுடியை பிடித்து இழுத்து மாடி சுவர் மீது மோத செய்தேன். இதில் அவளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் அவள் இறந்து விட்டாள். இந்நிலையில் குழந்தை இறந்ததை அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்காமல் தனது மகன் அருள் முருகனிடம் தெரிவித்ததாகவும் அதற்கு உதவியாக மகள் அஞ்சலி மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து குழந்தையை முந்திரி தோட்டத்தில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கமலத்தின் மகன் அருள்முருகன் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.