கோழிப்பண்ணைக்குள் புதைக்கப்பட்ட 5 வயது சிறுமி..! தோண்டி எடுத்த போலீஸ் அதிர்ச்சி! நெய்வேலி பதற்றம்!

5 வயது பெண் குழந்தையை கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அரங்கேறி உள்ளது.


நெய்வேலி அருகே மேலக்குப்பம் கிராமத்தில் உக்காண்டி, மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் அம்சவள்ளி, மீனா, கனகவள்ளி ஆகியோர் வசித்து வந்தனர்.கமலம் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளிகளாக உக்காண்டி, ராஜேஸ்வரி வேலை பார்த்து வருகின்றனர். 

இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் ராஜேஸ்வரியின் 2-வது மகள் மீனா மாயமான நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் கோழிப்பண்ணை உரிமையாளர் கமலம் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் செம்புலிங்க அய்யனார் கோவில் அருகே உள்ள கோழிபண்ணையில் சிறுமி மீனா கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் கமலத்தை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சிறுமி மீனாவை கொலை செய்து புதைத்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? அல்லது அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொன்று புதைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு பெற்றோரின் அலட்சியமே காரணம் என சமூகவலைதளங்களில் பொங்கிய போராளிகள் இந்த சிறுமியை கொலை செய்த சமூகத்தை பற்றி என்ன சொல்ல போகிறார்கள்?