அம்மாவை பார்க்கனும்..! டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக விமானத்தில் பயணித்த 5 வயது குழந்தை! 3 மாத தவிப்பின் வலி..!

3 மாதங்களாக தாயை பிரிந்து இருந்த 5 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பயணித்து தாயை சந்தித்த சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


கொரோனா வைரஸ்  தாக்குதலினால் நாடு முழுவதிலும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு  சின்ன சின்ன தளர்வுகளுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதற்கேற்றவாறு இன்று காலை முதல் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் பறந்தன.

டெல்லியிலிருந்து 5 வயது சிறுவன் ஒருவன் 3 மரங்களாக தாயை பிரிந்து கிடந்த நிலையில், தனியாக விமானத்தில் பறந்து தாயை சந்தித்துள்ள செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு நகரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் விஹான் ஷர்மா. இவர் ஊரடங்கு காலத்திற்கு முன்பாகவே ஜனவரி மாதத்திலேயே டெல்லியிலுள்ள தன்னுடைய தாத்தா வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இதற்கிடையே திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இடங்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்துள்ளார்.

இதனிடையே தாயை பிரிந்து, தாத்தாவின் அரவணைப்பிலேயே அந்த சிறுவர் 3 மாத காலம் இருந்துள்ளார். இதையடுத்து 4-ம் கட்ட போராட்டம் காலத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளாக இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விமான சேவை தொடங்கியுள்ளது.

அதன்படி டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று காலை சிறப்பு விமானம் ஒன்று இயக்கப்பட்டது. அந்த விமானத்தில் சிறப்பு வசதியுடன் 5 வயது சிறுவன் கையுறைகள், முகக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு கையில் செல்போனுடன் பயணித்துள்ளார். அவருடைய பெற்றோர் கொடுத்த அறிவுறுத்தலின்படி பாதுகாப்பாகவும் பெங்களூரு விமான நிலையம் வரை அந்த சிறுவன் பத்திரமாக வந்துள்ளார்.

விமான நிலையத்தில் அந்த சிறுவனை தாயார் பத்திரமாக அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.