ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி விழுந்துள்ள சம்பவமானது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் ஆழ்துளை கிணறு! 50அடியில் சிக்கிய 5 வயது சிறுமி சடலமாக மீட்பு! சுர்ஜித் சோகம் மறைவதற்குள் பரிதாபம்!
கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தது 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவமானது தமிழகத்தை உலுக்கியது. இந்த விவகாரத்திற்கு பிறகு நிறைய ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.
இது போன்ற மற்றொரு சம்பவமானது ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கர்ணால் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட ஹர்சிங் புரா என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் அருகில் ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
5 வயது சிறுமி நேற்று மாலை அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராவிதமாக குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. சம்பவமறிந்த பெற்றோர் உடனடியாக அப்போது காவல்த்துறையினரிடமும், தீயணைப்புப்படை துறையினரிடமும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆழ்துளை கிணறானது 50 அடி ஆழம் உடையது. அவ்வளவு ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக ஒரு பொர்கிளேயின் எந்திரம் மூலம் அருகில் குழி தோண்டி வருகின்றனர். மேலும் குழி தோண்டப்பட்ட பிறகு அருகே சுரங்கப்பாதை உருவாக்கி அதன் மூலம் குழந்தையை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.