குப்பைத் தொட்டி அருகே அட்டைப்பெட்டியில் 5 மாத குழந்தை சிசு..! அதனை பார்த்து தெரு நாய் செய்த செயல்! சென்னை பகீர்!

குப்பை தொட்டியில் இருந்த 5 மாத ஆண் கருவை நாயொன்று நடுரோட்டில் இழுத்து வந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை பெரம்பூரில் ராகவன் சாலை என்ற இடம் அமைந்துள்ளது. அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் 5 மாத ஆண் கருவானது பெட்டியில் அடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த தெருநாய்கள் சில இதனை மோப்பம் பிடித்தன. மோப்பம் பிடித்த பின்னர் அட்டைப்பெட்டியை வெளியே  எடுத்து கருவை கவ்வி நடுரோட்டில் வீசியது. 

கருவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்‌. உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கருவை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கருவை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு கருவில் இருக்கும் சிசு என்பதால் யாரேனும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துவிட்டு பெட்டியில் அடைத்து குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.