திடீரென வெடித்த டயர்! கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்ட கார்! அடுத்தடுத்து மோதி நசுங்கிய 7 கார்கள்! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்! 20 பேர் காயம்!

புதுக்கோட்டை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை என்ற பகுதியில் நடந்த கோர விபத்தில் பரிதாபமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .


புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை குளத்தூர் அருகே வந்துள்ளது. அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்த காரணத்தினால் ஓட்டுனரால் காரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியவில்லை. அத்துடன் கார் பாதை மாறி எதிரே அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இதனை அந்த இரு கார்களுக்கும் முன்பும் பின்பும் உள்ள யாரும் கவனிக்கவில்லை.

இதனால் அடுத்தடுத்து 5 கார்கள் இந்த இரண்டு கார்கள் மீதும் மோதியது. எதிரே வந்த கார்கள் மற்றும் பின்னால் வந்த கார்கள் ஆக ஏழு கார்களை ஒன்றோடு ஒன்றாக மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சாலை விபத்தில் ஒரு பெண்மணி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுமார் 20க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் கீரனூர் காவல்துறையினர் உடல்களை மீட்டனர்.

காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.