மனைவியுடன் தகராறு! நான்கு வயது மகளை அடித்துக் கொல்ல முயன்ற கணவன் - ஸ்விட்சர்லாந்து பயங்கரம்

சொந்த குழந்தையை அடித்து தரையில் தள்ளிய தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது ஸ்விட்சர்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈராக்கை சேர்ந்த தம்பதியினர் சுவிட்சர்லாந்து நாட்டில் ப்ரூக் எனும் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை அன்று வந்தனர். இத்தம்பதியினருக்கு ஒரு சின்னப் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது கணவன் மனைவிக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பு வரை சென்றது.

ஆத்திரம் தலைக்கேறிய கணவர் செய்வதறியாது தன் குழந்தையை பலமுறை அடித்துள்ளார். மேலும் குழந்தையை தரையில் தள்ளிவிட்டு தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த குழந்தை ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்து வந்தனர். ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் குழந்தை தாக்கிய நபரை கைது செய்தனர்.

கைது செய்த அதிகாரிகள் குழந்தையை தாக்கியவரை விசாரணைக்கும் உண்டு கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர். அதன்படி குழந்தையின் தந்தைக்கு, குழந்தையை காண 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்தினால் ப்ரூக் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.