4 வயது மகனுக்கு ரத்தப்புற்றுநோய்..! சிகிச்சையை துவங்கும் முன் நேர்ந்த துயரம்! சடலத்துடன் தவிக்கும் பெற்றோர்..! நெஞ்சை உலுக்கும் காரணம்!

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4 வயது குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்கு பெற்றோர் போராடி வரும் செய்தியானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவருடைய மனைவியின் பெயர் திவ்யா. இவர்களுக்கு வைஷ்ணவ் என்ற 4 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தங்களுடைய தொழிலுக்காக கேரளாவை விட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செட்டிலாயினர்.

இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு வரை இவர்கள் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். நன்றாக ஆடிப்பாடி விளையாடி கொண்டிருந்த வைஷ்ணவுக்கு திடீரென்று தொடர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்தபோது, வைஷ்ணவ் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் காப்பாற்றும் நிலைமையை கடந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் மருத்துவர்கள் விடாமுயற்சியாக கீமோதெரபி சிகிச்சையினை தொடர்ந்தனர். ஆனால் கீமோதெரபி சிகிச்சை பலனளிக்காமல் வைஷ்ணவ் பரிதாபமாக உயிரிழந்தான். 

தங்களுடைய மகன் எந்தவித குறைபாடும் இன்றி விளையாடி வந்த நிலையில் 15 நாட்களுக்குள் உயிரிழந்த சம்பவமானது பெற்றோரை மனதளவில் உலுக்கியது. மேலும் எப்படியாவது மகனின் உடலை கேரளாவுக்கு எடுத்துச்சென்று பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் தற்போது போராடி வருகின்றனர்.

இந்த செய்தியானது கேட்போர் நெஞ்சை உருக வைக்கும் அளவில் அமைந்துள்ளது.