கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட 4 வய்து ஹரீஸ்! மிரள வைக்கும் காரணம்! தேனி சம்பவம்!

பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வந்த 4 வயது சிறுவன் ஒருவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. முருகன் என்பவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 4 வயதான ஹரிஷ் என்ற மகன் உள்ளார். இதனிடையே கணவன் மனைவி இடையே பலத்த சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. 2 வருடங்கள் முன்னர் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து சென்றனர்.

முருகன் மறவப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கீதா, தேவாரம் பகுதியை சேர்ந்த தன் நண்பரான உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கீதா தன் பெற்றோர் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார்.

சிறுவன் ஹரிஷின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறியது. தாய் மற்றும் தந்தையின் வீடு அருகாமையில் இருந்ததால் இருவரின் வீட்டிலும் வசித்து வந்தான். கீதாவின் தந்தை மற்றும் தங்கை ராஜேஸ்வரியிடம் ஹரிஷ் வளர்ந்து வந்தார்.

நேற்று இரவு பொதுவெளியில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிஷ் திடீரென்று மாயமானார். ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் ஹரிஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த ராஜேஸ்வரி, அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

காவல்துறையினர் ஹரிஷை பல்வேறு இடங்களில் தேடினர். இறுதியாக கோம்பை பகுதியில் இருந்த தண்டவாளத்தில் முகம் முழுவதும் கற்களால் அடித்து விட்டு சிறுவன் ஒருவன் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்தது. ராஜேஸ்வரி அழைக்கிறேன் அடையாளத்தை காண வைத்த போது அது ஹரிஷ் தான் என்று அடையாளம் கண்டுள்ளார். 

சிறுவனின் உடலை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது தீமையையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.