நள்ளிரவு! சாலை ஓரம் நின்ற 4 பெண்கள்! நெருங்கிய ஆட்டோ டிரைவர்! பிறகு அரங்கேறிய திக்திடுக் சம்பவம்! சென்னை பரபரப்பு!

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண்களை பொதுமக்கள் வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் கோபாலபுரம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு 4 பெண்கள் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சென்றுள்ளார். அவர்களிடம் அந்த ஆட்டோ ஓட்டுநர், சவாரி வேண்டுமா என்று கேட்டுள்ளார். 

உடனடியாக அவர்கள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் கையிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். வலி தாங்காமல் அந்த ஆட்டோ ஓட்டுனர் அலறுவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆட்டோ ஓட்டுனருக்கு அருகே சென்றனர். 

4 பெண்களில் மூன்று பேர் தப்பி செல்ல, ஒருவர் மட்டும் பொது மக்களின் கைகளில் வசமாக சிக்கி கொண்டார். உடனடியாக அவர்கள் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி, அப்பகுதி காவல்நிலையத்தில்  புகாரளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் பெயர் புகழ்மதி என்பது தெரியவந்துள்ளது.  

மேலும், மேற்பட்ட விசாரணைக்காக அவரை காவல்துறைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.